ஜூலை 1ம் தேதி அமலாக உள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில் 146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இது ஜனநாயகத்தை இருட்டடிப்பு செய்த சம்பவம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மு.க ஸ்டாலின் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.