மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் எழும்பூரில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் திமுக சட்டப்பிரிவு நிர்வாகிகள், அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.