புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 3 சட்டங்களும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க மாநில அரசுகளுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை
புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மூன்று குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள் முரண்பாடுகள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. 3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள் முரண்பாடுகள் உள்ளது அனைத்து துறைகளுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் தேவை. சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசமைப்பு 348 பிரிவை தெளிவாக மீறுவதாகும். சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களுடன் விவாதம் சட்ட பாடங்கள் மாற்றி அமைக்க வேண்டும். 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.