டெல்லி ராஜேந்திரன் நகரில் செயல்பட்டு வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை 13 முதல் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மழை பெய்தால் அடித்தள பகுதியில் 10 நிமிடங்களில் நீர் தேங்கி விடுவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.