மொராக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெபல் இர்ஹவுட் எனப்படும் பழங்கால மனித எலும்பின் எச்சங்களிலிருந்து 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித மூதாதையரின் முகத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எலும்புகளை 3டி முறையில் ஸ்கேன் செய்து, ஆய்வில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித மூதாதையர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.