நில மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பாய் சோரன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் குழு தலைவராகத் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
தனது தலைமையிலான புதிய அரசு ஆட்சியமைக்க ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரியுள்ளார். இதன்மூலம் 3வது முறை முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.