தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு இன்று முதல் வரும் 24ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் எனதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சட்டப்பள்ளிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.