கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சாராய வியாபாரி கோவிந்தராஜனிடம் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த 33 பேர் இதுவரை உயிரிழந்து உள்ள நிலையில் 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவிந்தராஜன் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஏற்கனவே கைதாகி உள்ள நிலையில் தற்போது கோவிந்தராஜனின் மனைவி விஜயா கைது செய்யப்பட்டுள்ளார்