தமிழகத்தில் 3500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி கட்டட அனுமதி தேவையில்லை என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், 2500 சதுர அடி நிலத்தில் 3500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற தேவையில்லை என்றாலும் சுயசான்று மூலமாக அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் கட்டட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.