இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசி மாகாணத்தை சேர்ந்த 36 வயது பெண்ணை கடந்த ஜூலை இரண்டாம் தேதி முதல் காணவில்லை. போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் அவரை எங்கு தேடியும் காணவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு அருகே அவரது செருப்பு காணப்பட்ட நிலையில் அங்கு மலை பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்து உள்ளது. அதன் வயிற்றை கிழித்து பார்த்த போது காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் உள்ளே இருந்துள்ளார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார்.