நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில், 29வது கேள்விக்கு 2 சரியான விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கேள்விக்கு கொடுக்கப்படும் 4 தேர்வுகளில் 1 மட்டுமே சரியான விடையாக இருக்க வேண்டும் என ஆணையிட்டது. இதன்மூலம் 4 லட்சம் மாணவர்கள் 4 மதிப்பெண்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 720/720 எடுத்த 61 பேரில் 44 பேர் மதிப்பெண்களை இழக்க நேர்ந்துள்ளது.