டெஸ்டில் 400 ரன்கள் என்ற தனது சாதனையை ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார். அதிரடியாக விளையாடும் இருவருக்கும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா கடந்த 2004இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 400 ரன்கள் எடுத்த சாதனையை இன்றளவும் யாராலும் முறியடிக்க முடியவில்லை.