செல்போன் நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் சேர்த்த புதிய 4g மற்றும் 5ஜி வாடிக்கையாளர் எண்ணிக்கையை தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜியோ 30 லட்சம் வாடிக்கையாளரை சேர்த்து உள்ளது. அடுத்ததாக ஏர்டெல் 20 லட்சம், வோடாபோன் 6.3 லட்சம் இழந்துள்ளது. ஜியோ வில் பயன்பாட்டில் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை 43.34 கோடியாக அதிகரித்த நிலையில் ஏர்டெல் 38.33 கோடியாகவும் வோடாபோன் 19.26 கோடியாகவும் குறைந்துள்ளது.