தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், ஏற்கெனவே ஜூலை மாதம் திறக்க உத்தரவிட்ட நீரை கர்நாடகா, தமிழகத்துக்கு முறையாக வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினர். தமிழகத்தின் கோரிக்கைக்கு கர்நாடக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.