ரொமானியாவில் சுமார் 8,000 கரடிகள் உள்ளன. ஆனால் தற்போது 481 கரடிகளைக் கொல்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கரடி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 274 பேர் படுகாயமடைந்துள்ளனர். சமீபத்தில் 19 வயது மலையேறும் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். கரடிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், அவை மனிதர்களை தாக்குவதை தடுக்கும் வகையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு 220 கரடிகள் கொல்லப்பட்டன.