ஒடிசாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பொறுப்பேற்றுள்ள நிலையில் மின்னல் வேகத்தில் அரசு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். முதல்வராக பதவியேற்ற பின்னர் மாநில விருந்தினர் மாளிகையில் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல பிரபலங்கள் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள், ஊழியர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரையும் முதல்வர் சந்தித்து பேசியுள்ளார்.