நடிகர் விஜய் ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அன்னதானம் ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள் பெண்களுக்கு தையல் மிஷின் வழங்க திட்டமிட்டுள்ளார்களாம்.