கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை 27, புதுச்சேரி ஜிப்மர் – 3, சேலம் அரசு மருத்துவமனை – 16, விழுப்புரம் அரசு மருத்துவமனை – 4 என இறப்புகள் பதிவாகியிருக்கின்றன. மேலும் 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.