சர்வதேச கிரிக்கெட்டில் 50,000 பந்துகள் வீசி, ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 40,001 பந்துகள், ஒருநாள் போட்டிகளில் 9584 பந்துகள், சர்வதேச டி20 போட்டிகளில் 422 பந்துகள் என மொத்தம் 50,007 பந்துகளை வீசி இருக்கிறார். இந்த சாதனையை இதற்கு முன்பு முரளிதரன், அனில் கும்ப்ளே மற்றும் வார்னே படைத்துள்ளனர்.