அரசுப் பள்ளிகளில் உள்ள 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையில், 2011-12 நிதியாண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1581 பட்டதாரி ஆசிரியர்கள், 3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரமாக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு காலம் கடந்த டிசம்பரில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.