புழல் சிறை மருத்துவமனையில் இருந்தபடி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி மூலமாக நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். இதனால் அவருக்கு என்ன ஆனது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சிறை காவலர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், 52 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.