கன்னடா சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமார் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். இவருக்கும் மைசூருவை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் 2019 ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இருவரும் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.