பதினோராம் வகுப்பு மாணவர்கள் முதல்வரின் திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் ஜூன் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெறும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 10,000 வீதம் இளநிலை படிப்பு முடிக்கும் வரை வழங்கப்படும்.
இதற்கு மாணவர்கள் https://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அத்துடன் தலைமை ஆசிரியரிடம் ரூபாய் 50 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.