சென்னை சேப்பாக்கில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். 197 பந்துகளில் 205 ரன்கள் அடித்த அவர் ஒரு ரன் எடுக்க முயன்று ரன் அவுட்டானார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 525 ரன்கள் எடுத்துள்ளது.
அதே சமயம் ஸ்மிருதி மந்தனா 149 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மேலும் ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்
தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்நாள் முடிவில் இந்திய அணி 525 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் முதல் நாளில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இருப்பினும் முதல் இன்னிங்சில் (575) அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. நாளை நடைபெறும் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா 51 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் இந்த சாதனையை முறியடிக்கும்.