வயது என்பது வெறும் எண்தான் என்பதை உறுதி செய்யும் வகையில் 58 வயதில் ஜியிங் ஜெங் என்பவர் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகமாக வீராங்கனையாக களமிறங்க உள்ளார். 1983இல் சீனாவுக்காக ஒலிம்பிக்கில் விளையாடினார். அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “இரு வண்ண விதி”யால் அவர் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகினார். சுமார் 41 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ஆடுகளத்திற்குள் காலடி எடுத்து வைக்க உள்ளார்.