6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா வழிநடத்தும் என்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கருத்தரங்கில் பேசிய அவர், மோடி தலைமையின்கீழ் 4ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா பின் தொடர்ந்ததாகவும், 5ஜியில் உலகோடு சேர்ந்து நடைப்போட்டதாகவும் கூறினார். தொழில்நுட்ப நுகர்வோர் என்பதில் இருந்து, விநியோகஸ்தர் என்ற நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.