கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவனூர் என்ற பகுதியில் நிதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிஏ பட்டதாரி. இவர் நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் நாகலட்சுமி 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் நாகலட்சுமி, நிதீஷ்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நிதிஷ் குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது நிதீஷ் குமார் நாகலட்சுமியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதைத்தொடர்ந்து இரு வீட்டார் முன்னிலையில் ஒரு கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மேலும் நிதீஷ் குமாரிடம் நாகலட்சுமியிடம் இனி எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.