தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 5% ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் பாரத் நிதி என பெயரிடப்பட்டு, ரூ.80,000 கோடி நிதி தயார் செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியானது ஸ்டார்ட்அப்கள், MSMEகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடமிருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பெற்றுள்ளது. 6ஜி சேவைகளுக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.