தமிழகத்தில் 6.52 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திமுக அரசின் ஆட்சியில் வருவாய் துறை செயல்படுத்திய திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு ஆறு லட்சத்து 52,559 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 41 புள்ளி 81 லட்சம் பட்டா மாறுதல் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.