பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 665 உட்பட நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 6128 பணியிடங்களுக்கு www.ipbs.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது.