டெல்லி விமான நிலையத்தில் 67 வயது முதியவரை போல வேடமணிந்து கனடா செல்ல முயன்ற 24 வயது இளைஞரை சி ஐ எஸ் எப் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இளமையான தோற்றம், தோல் அமைப்பு மற்றும் குரல் ஆகியவற்றால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை தனியாக அழைத்து சோதனை செய்ததில் தாடி மற்றும் மீசைக்கு வெண்மை நிற டை அடித்திருந்தது அம்பலமானது. விசாரணையில் போலி பாஸ்போர்ட் மூலமாக கனடா செல்ல முயன்றது தெரியவந்தது.