தமிழ் சினிமாவில் இரவின் நிழல் திரைப்படத்தை தொடர்ந்து டீன்ஸ் திரைப்படத்தை பார்த்திபன் தற்போது இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை சிவப்பிரசாத் என்பவர் செய்து வந்துள்ளார். இதற்காக 42 லட்சம் முன்பணம் கொடுத்த பார்த்திபன் பணிகளை முடிக்காததால் முழு தொகையான 68.50 லட்சத்தை தராமல் கால நீட்டிப்பு செய்திருக்கிறார். இந்த நிலையில் சிவப்பிரசாத் 88.38 லட்சம் கேட்பதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.