இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது என்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் உரையாற்றி வரும் ராகுல் காந்தி, நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. பணம் இருந்தால் தான் மருத்துவப் படிப்பு என்ற நிலையை தற்போது நீட் உருவாக்கியுள்ளது. நீட் குறித்து விவாதிக்க கோரினால் அரசு அதை பரிசீலிக்கவில்லை. நீட் முறைகேடு குறித்து குடியரசு தலைவரின் உரையில் எதுவும் இடம்பெறவில்லை என்று காட்டமாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.