தென் தமிழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜாதி ரீதியான கொலை அதிகரிக்க தொடங்கியது அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியது. இந்த நிலையில் பணி மாறுதல் வேண்டி விண்ணப்பித்த மதுரை மற்றும் நெல்லை உட்பட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்கள் 70 பேரை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐஜி அதிரடியாக உத்தரவிட்டார்.