மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் 8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து ரயில்வே தொழிலாளர்கள் கூட்டமைப்பு மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள வேறுபாடுகளை களையுமாறும், 8வது மத்திய ஊதிய குழுவை உடனடியாக அமைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.