மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை மாற்றி அமைக்க எட்டாவது ஊதியக்குழு அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று மாநிலங்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய குழு அமைக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு ஏழாவது ஊதிய குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. அதன்படி 2026 ஆம் ஆண்டு எட்டாவது ஊதிய குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.