கோவை திமுக முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் ஸ்டாலின் மேடைக்கு வர இரவு 8 மணி ஆகும்.
இதன்காரணமாக அதுவரை தன்னால் சாதாரண அரசியல்வாதியாக மேடையில் அமர முடியாது என கருதியதாகவும், முதல்வர் இல்லாத நிலையில் மேடையில் பேச தயாராக இல்லாததாலுமே அவர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும் திமுக தலைமைக்கு வேறு ஒரு காரணத்தை கூறினாராம்.