தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று, கல்வி பயிலவிருக்கும் 8 மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி, முதல்வர் ஸ்டாலின் இன்று மடிக்கணினிகளை வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று சென்னை, ஐஐடி, திருச்சி என்ஐடி, தரமணி என்ஐஎப்டி ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ள 8 மாணாக்கர்களுக்கு முதல்வர் மடிக்கணினிகளை வழங்கினார்.