திரிபுராவில் 47 மாணவர்கள் எச்ஐவி தொற்றால் உயிரிழந்துள்ளதாக, அம்மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. முக்கியமான பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 828 மாணவர்களுக்கு எச்ஐவி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 572 மாணவர்கள் திரிபுராவிலும், மற்ற மாணவர்கள் உயர் கல்விக்காக பிற மாநிலங்களுக்கும் சென்றது தெரியவந்துள்ளது. அதீத போதை பயன்பாடு, இதற்கு காரணமாக கூறப்படுகிறது.