தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆக. 19 – 23 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூலை 18 24க்குள் www.dge.tn.gov.in -இல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு கட்டணம் ₹195-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும். இத்தேர்வு குறித்த முழு கால அட்டவணை உள்ளிட்ட தகவல்களை மேற்கொண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.