91.5% ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பெருமிதம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய கோட்டங்களில் இயக்கப்பட்ட ரயில்களில் 91.5% ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.