தமிழகம் முழுவதும் ரூ.264.15 கோடி செலவில் கட்டப்பட்ட 956 புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்கள், திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தை அவர் திறந்து வைத்தார். அத்துடன், நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு பெற்ற 8 பேருக்கு மடிக்கணினி வழங்கினார்.