+1 மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தை 9ம் வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும். 10ம் வகுப்பு வரை வழங்கப்படும் அரசின் அனைத்து உதவிகளையும் 12ம் வகுப்பு வரை விரிவுபடுத்தலாம் என முதல்வருக்கு முருகேசன் குழு பரிந்துரை செய்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். வாரத்துக்கு 4 பாடவேளையாக உடற்கல்வி வகுப்புகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.