இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்க கம்பீர் 5 நிபந்தனைகளை விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல் நிபந்தனை என்னவென்றால், டீம் இந்தியாவின் கிரிக்கெட் செயல்பாடுகளை கம்பீர் முழுமையாகக் கட்டுப்படுத்த விரும்புகிறார்.
இரண்டாவதாக, கம்பீர் தனது சொந்த உதவி ஊழியர்களை தேர்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய ஆதரவு ஊழியர்களில் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் ஆகியோர் உள்ளனர்.
மூன்றாவதாக சர்ச்சைக்குரிய ஒரு நிபந்தனையாக, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்கும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சரியாக விளையாடவில்லை எனில், மூத்த வீரர்கள் ரோஹித், கோலி, ஜடேஜா. ஷமியை நீக்க வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோலி-கம்பீர் இடையே 2 முறை மோதல் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
நான்காவதாக, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி அணி வேண்டும் என்று கம்பீர் விரும்புகிறார். இறுதியாக, 2027 ODI உலகக் கோப்பைக்கான வரைபடத்தை ஆரம்பத்திலிருந்தே தயார் செய்ய கம்பீர் விரும்புகிறார்.