அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் விற்றதாகத் தகவல் வருகின்றன என்று திமுக அமைப்புச் செயலாளர் R.S.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளச்சாராய உயிரிழப்புகளை வைத்து இபிஎஸ் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக விமர்சித்த அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திட்டமிட்டு அரசியல் செய்யாமல், தீவிரத்தைப் புரிந்துகொண்டு திமுக அரசுக்கு உறுதுணையாக
எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.