தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆலாந்தா கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (75). இவரது மகன் சின்னத்துரைக்கு தெரியாமல் தோட்டத்தை விற்றார். இதனையறிந்த சின்னத்துரை (45), இன்று காலை கருப்பசாமியை சுமோ கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் சின்னத்துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஏற்றி தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.