GST வரி முறை அமலுக்கு வந்த பிறகு வீட்டு உபயோக பொருள்களின் விலை குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய மறைமுக வரி & சுங்க வாரியத்தின் தரவுகளை தனது x பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “மத்திய அரசின் நிதி கொள்கை & சீர்திருத்தங்கள் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. குறிப்பாக, GST வரி முறையால் ஏழை, எளிய மக்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.