செம்மொழித் தமிழ்நாள் விழா ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 391.35 லட்சம் மதிப்பீட்டில் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் எனவும், சிறந்த நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் செம்மொழியின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடத்தி, பரிசினை வழங்க ரூ.1 கோடியே 88 இலட்சத்து 57 ஆயிரம் அளிக்கப்படும்.