ஹட்சன் நிறுவனத்தின் தயாரிப்பான ஆரோக்யா பால் மற்றும் தயிர் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 68க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பால் (full cream) கடந்த வாரம் ரூபாய் 66 ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 1 ரூபாய் குறைக்கப்பட்டு ரூபாய் 65 ஆக விற்கப்படுகிறது. விற்பனை சரிவதன் காரணமாக பால் விலை குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.