திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது அதிமுகவினர் கண்களை உறுத்துவதாக, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர். இந்த விவகாரத்தில் 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றார். மேலும், தனக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடைகோரிய இபிஎஸ், தற்போது சிபிஐ விசாரணை கோருவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.